Tuesday, 13 August 2019

ஒரு முட்டாளின் முகம் !

எவ்வளவுக்கூர்மை என்னறிவு!

என்க,
பார்க்க முடிகிறது
ஒரு முட்டாளின்
முழுமையான முகத்தை.

அறியாமை அசைந்தாலும்
அந்த மௌன முகத்தில்
சலனம் சற்றும் இல்லை - நிறுத்திப்பார்க்க
வேண்டும் நமக்கு நிதானம்!

ஒரு கலியுக நாகரீகவாதி
நிர்வாண நாகரிகத்தை
கண்முன்னே காணும் சூழலது!

புதிய அம்முகம்
புன்னகைக்க திடுக்கிட்டேன்,
அடுத்த துளி அறிவை
நான் காலத்தோடு கடக்கும்போது.