நீ
ஆண் - பெண் என
பிரிந்திருப்பது ஏன் உயிரே !
உன்னிடம் விடை கிடைக்கும்
இடங்கண்டு சொல்வாயோ?
எனக்கும்,
பிறக்கும் ஆசை கொடுத்திருப்பாய்.
பரம் சென்ற
அரு ஒன்றை பிரியச்செய்திருப்பாய்.
நான் பிறக்க - வரங்கேட்டு
எத்தனை தவம் பூண்டேனோ ?
முதுமை எல்லை மீறி
முகம் சுழிக்கும் என்னை
எடுக்க உண்மையில்
எத்தனை சிவம் ஆனேனோ ?
எதுவும் புரியா பிரம்மை
புரிந்துகொள் என்கிறது.
பிறந்தேன் - எழுந்தேன்.
எளிதில் தொடும் உடல்
எளிதில் தொழும் உள்ளம்
எதற்கோ பிறந்தேன் நான் !
உன்னிடம் கேட்க முன்வந்து
நீயே கேள்வியானதுதான் விடையோ
உயிரே?