Friday, 11 October 2019

நீ யாரென அறிவாயா?

எவரும்
சொல்லாத பதில்கள்
உன்னிடம்
நிறைய உள்ளதோ
கேள்விகள் ஏராளாமாக வெளிவர
திகைக்கிறேன்.

என்னிடம்
கற்க வந்தேன் - என்கிறாய்
என்னை
கற்க வந்ததாக தெரிகிறது,
உண்மையில்
என் தேவைகள் உனக்கு புரிகிறது.
சிறுவன் என்கிறாய்,
சீடன் என்கிறாய்.

அறியாமையின் இருளில்,
விழித்துக்கொண்டதுதான்
உன் கேள்விகள் என்றால்
நீ ஒளி அடைய 
வழி செய்திருப்பேன்.

இல்லை!

உன் அறிவும்
அதன் பொருள் ஊரும் திறனும்
கேள்விகள் மட்டும் கொண்டே
உணர்த்துகிறது - என்னுள்
பதில் கூறும் முயற்சியில்
உருகத்தொடங்கும்
என் மன திட உணர்வுகள்.

கண்முன் தெரியும்
இயல்பின் வெற்றிடத்தில்
நீ மட்டும் தெரிகிறாய்

சிறந்த சிந்தனைகள்!

வணா! (பெயர்)
இங்கே வா
உன்னிடம் ஒரு கேள்வி,
உனக்கு தெரிந்தவரை பதில் சொல்
- நீ யாரென அறிவாயா?

-------------------------------------------------------

நானும் விதூடகன்!

No comments:

Post a Comment