உணர்வுகள்,
எந்த ஒரு அசைவின் எதிரொலி!
நீ சொல்லும் என் உலகம்
இந்த நொடியின் அந்த உலகம்
மாறும் உணர்வுகளால்.
அவ்வண்ணம்
சிறுக சிறுக சேகரித்தேன்
இப்பூமியில் பிறந்தமுதல்!
நினைவுகள் தோன்றின!
நினைவுகளை
உணர்வில் நிறுத்தி வைத்தேன்.
நிஜங்களில்
உணர்வுகளின் நிரல்கள் கண்டேன்,
நிழலுக்கும் உணர்வுள்ளதோ
எனும் எல்லைவரை நின்றேன்.
சேர்ந்த உணர்வுகள் சீர் செய்து
பண்புகள் பற்றிக்கொள்ள
பறந்தேன்!
புது புது உணர்வுகள் உருவாக்கினேன்.
புனரலனின் தனிமைக்கும்
புதிர் கொடுத்தேன்
பூரிப்படைந்தேன்!
கூடாத குகையினில்
கூடெழுப்பி சிக்கிக்கொண்டேன்.
சிறைசென்றேன்.
அனுபவத்தின் சிறுப்பொறியில்
மீண்டும் சிறகடித்தேன்!
தீராத ஏக்கத்தில் விடைப்பெற்றேன்
எண்ணங்களின் மாறாத மாற்றத்தில்
மாட்டிக்கொண்டிருந்தேன்.
என் முன்ஜென்மத்தில்!
எந்த ஒரு அசைவின் எதிரொலி!
நீ சொல்லும் என் உலகம்
இந்த நொடியின் அந்த உலகம்
மாறும் உணர்வுகளால்.
அவ்வண்ணம்
சிறுக சிறுக சேகரித்தேன்
இப்பூமியில் பிறந்தமுதல்!
நினைவுகள் தோன்றின!
நினைவுகளை
உணர்வில் நிறுத்தி வைத்தேன்.
நிஜங்களில்
உணர்வுகளின் நிரல்கள் கண்டேன்,
நிழலுக்கும் உணர்வுள்ளதோ
எனும் எல்லைவரை நின்றேன்.
சேர்ந்த உணர்வுகள் சீர் செய்து
பண்புகள் பற்றிக்கொள்ள
பறந்தேன்!
புது புது உணர்வுகள் உருவாக்கினேன்.
புனரலனின் தனிமைக்கும்
புதிர் கொடுத்தேன்
பூரிப்படைந்தேன்!
கூடாத குகையினில்
கூடெழுப்பி சிக்கிக்கொண்டேன்.
சிறைசென்றேன்.
அனுபவத்தின் சிறுப்பொறியில்
மீண்டும் சிறகடித்தேன்!
தீராத ஏக்கத்தில் விடைப்பெற்றேன்
எண்ணங்களின் மாறாத மாற்றத்தில்
மாட்டிக்கொண்டிருந்தேன்.
என் முன்ஜென்மத்தில்!