Wednesday, 11 April 2018

சார்ந்த எண்ணங்கள் !

எண்ணங்கள்,
யோசிப்பது அனைத்துமே எண்ணங்களா ?

இவ்வுலகில் பிறந்தேன்
- இன்று வரை வளர்கிறேன்.

சிலையாய் சிந்தித்தாலும்
சிலை சிந்திக்குமா என்பதில் தோற்கிறேன்.
சரி,
முன்னோடிகள் இருக்கிறார்களா
என் பாதையில் ?
பாதி கடந்தவர்கள் எல்லாம்
பைத்தியம் ஆனார்கள் என எச்சரிக்கை.

ம்,
தாங்கிக்கொண்டேன்
- இன்று வரை வளர்கிறேன்.

உண்மையில் உலகிற்கு புரிகிறதா ?

ஒருவர்
உன் கண்களில் தெரிவதைவிட,
அவர் கண்களுக்கு பின்னால்
ஆயிரம் பார்க்கிறார்கள் என்று.

எனக்கு எதுவும் தெரியவில்லை !

பிறவியிலேயே பார்வை போய்
தனிமை வந்து
மனிதனிடம் மாட்டிக்கொண்ட
நாய்போல்,
நான் ஊமையாக பிறந்துவிட்டேன்.
- என ஊளையிடுகிறேன்

தவிர்க்க முடியாதவைதான்
தகர்க்க முடியாதவை அல்ல !

நம் நினைவு தெரியும் முன்பே
நம்மை நினைவில் கொண்டதல்லவா
இந்த சமூகம் !
சராசரி ஒருவனாக
வளம் வருவேனா
எனக்குள்ளாகவே ஏக்கங்கள்.
நான் என்னை மறந்தாலும்
ஞாபகம்,
சிலரை மட்டும் நினைவூட்டுவது
அன்பில்தான் !

ஒரு கடிதமாய் உருவெடுக்கிறேன் !
சிலருக்கு செய்தி
சிலருக்கு உணர்வாக உலவுகிறேன்.
நீ கரைந்த எண்ணங்களில்
நான்
நானாக வாழ வழிகிடைக்குமா ?

No comments:

Post a Comment