மறக்கப்படுகிறாய் பெண்ணே
கொஞ்சம் கொஞ்சமாய்,
நீ யாரென்று தெரிந்த போதும்
என் மனதில் மறைகிறாய்,
பித்தம் தீர்ந்ததோ
பித்தன் திருந்தினானோ
தெரியவில்லை மின்னலே !
உன் ஓயாது ஒலித்த குரலும்
மௌனமாய் !
மனதிற்குள் என்கிறது இதயம்.
நானும் சாட்சியாயிற்றே
யாரிடமும் இல்லை நீ !
ஏனோ என்னவளே
என்னுள் மட்டும் ஒட்டிக்கொண்டாய்,
உனக்கு மட்டும் நான் எழுத்தாக
இயல்பெனும் இறப்பு இருக்கும்வரை
நாம் இருப்போம்.
நிலா வலம் வரட்டும்,
நீர் அது உன் பாதம் தேடட்டும்,
இவ்வியற்க்கை நம்மை சுகிக்கட்டும்.
இடம்பெயர்ப்போம் நாம்
' நீ இன்றி இல்லா உலகு '
படைப்போம்
எனக்கென மட்டும் ஒரு மழை
பொழிவாயோ !
என் கார் இருள் மேகமே !