Thursday, 20 September 2018

உயிர்

இவ்வுலகில்,
மறக்க வேண்டியது உயிர்மட்டும்தான் !
பாதுகாக்க வேண்டியதும் உயிர்மட்டும்தான் !
கண்டறிவோம் ஒரு வழியை
ஆன்மிகம் இல்லாத
ஒரு வழியை !

வெளிவரும் வார்த்தைகள்
உயிர் இனத்துக்கான
வார்த்தையாய் வளம் வரட்டும்.
ரீங்காரம் பாடும் கொசு - அதுவும்
மனிதன் விரல் தொட்டு விளையாடட்டும்.
இவை இயல்பாக நிகழட்டும்.

இயற்கை !
நல்வினை தீவினை அறியாதது,
எடுப்பதை கொடுக்கும்
நீ கொடுப்பதையே எடுக்கும்
இறுதியில் !
உன் நிகழ்வு
புவியில் நிகழ்ந்தவையாக இருக்கும்.
பொழுதுகள் போதாது தோழா !
உன் எண்ணத்தை குறிக்க
நீ எண்ணியவை
எழும் வெளிச்சத்தில்
கரையாது காத்துக்கொள்.
புது ஒரு விடியல் தொடங்கும் . . .


No comments:

Post a Comment