மெல்லிய புன்னகை உனக்கு !
யார் என தெரியாதபோதும்
புன்னகையும் - காகித பூவோ எனக்கு ?
எங்கிருந்து எழுந்தாய்
எங்கே அமர துடிக்கிறாய் ?
அழகான அலைகள் !
அவை புதிரோ
புலம்பலோ
நிற்கும் இடம் தென்படவில்லையோ
நிறுத்திப்பார் !
தனிமையில் கேட்கும் கேள்விகள்
உரையாடுவது யாரோடு ?
குழம்பும் ஆன்மாவே !
உனக்காகவேனும்
ஒரு வரி வடிக்க நினைக்கிறேன்.
சிரிப்பொலியின் அர்த்தம்
சிலரை மட்டும் நினைவூட்டுவது ஏன் ?
ஊர்ந்த உன் நினைவுகளில்
கூர்ந்த உன் பார்வைகள்
உலகம் மறந்து உன்னுள்ளே உருண்டு
உணர்ந்தது உன் தத்துவங்களால் !
புணர்ந்தது புது ஆயிரங்கள்.
யார் என தெரியாதபோதும்
புன்னகையும் - காகித பூவோ எனக்கு ?
எங்கிருந்து எழுந்தாய்
எங்கே அமர துடிக்கிறாய் ?
அழகான அலைகள் !
அவை புதிரோ
புலம்பலோ
நிற்கும் இடம் தென்படவில்லையோ
நிறுத்திப்பார் !
தனிமையில் கேட்கும் கேள்விகள்
உரையாடுவது யாரோடு ?
குழம்பும் ஆன்மாவே !
உனக்காகவேனும்
ஒரு வரி வடிக்க நினைக்கிறேன்.
சிரிப்பொலியின் அர்த்தம்
சிலரை மட்டும் நினைவூட்டுவது ஏன் ?
ஊர்ந்த உன் நினைவுகளில்
கூர்ந்த உன் பார்வைகள்
உலகம் மறந்து உன்னுள்ளே உருண்டு
உணர்ந்தது உன் தத்துவங்களால் !
புணர்ந்தது புது ஆயிரங்கள்.
No comments:
Post a Comment