Sunday, 8 April 2018

இறந்த எண்ணங்கள்

தோன்றும் எண்ணங்களோ,
அதன் மறுசொல்லோ,
அல்லது வெளிப்பாடோ
தோற்பது மட்டும்
நானாக இருக்கிறேன் .

ஆயிரம் முறையும் சொல்லிவிட்டேன்

இவை கடந்து போபவையே
கலக்கம் வேண்டாம்
தொடரும் எண்ணங்கள் தோற்பதில்லை
தோண்டும்வரை !
துளை வேண்டாம் உன் வாழ்வில்
துணிவெனும் துகள் போதுமே !

எவரும் கேட்பதாயில்லை

பிளவுபட்ட என் இதயம்
எப்படி சுகிக்குமோ - தெரியவில்லை
என் இறந்த எண்ணங்களை . . . .

தடை

பெரிதாய் ஏதேனும்
தடுப்பதாக தோன்றினால்
அன்னையென்றே பொருள் .
இல்லையென்றால்,
பெரிதில்லையென்பதையுணர் !

என் காலம் !

ஆரம்பமே
ஆடம்பரமானது,
யாவரும்
வெகுதூரமாய் ஓடுவதை காண்கிறேன் .
இயற்க்கை
யார் கண்ணிலும் காணவில்லை,
இயல்பை துரத்தும் நாடகம்
எத்தனை வடிவானவை .
நீயேனும் செவிகொடு இயல்பே
உண்மை மறக்கிறது
உறவுகள் கொண்டாடவில்லை
உனக்கும்
எனக்கும்
உண்டான உறவின்
உரு தெரியவில்லை !

கேள்விகள் ஏனும் கேட்போம் !

இயல்பே !

நீ
எத்தனை அசைவுகளாய் நகர்கிறாய் ?
நான்
ஓர் நாளையே கணக்கிடலாம் ! 

Friday, 10 November 2017

பாவையே !

உன்
தேடல் எதுவோ பெண்ணே
என் மீது மட்டுமா
இந்த ஏக்கப்பார்வை !
நம்மை
கடந்தது சில நொடிகளே
சில செயல்களால் நிறைந்திருப்போம்
நம் ஒருநொடிக்காதலில் !
இன்னும்
தூரமாகவே இருக்கிறேன்
நீ மட்டும் நினைவில்,
கண்ணாடி சிறையில்
இருவிழி புன்னகையால்
முகம் மலர்ந்த பாவையே
என்
பதுமை படியில்
நீ முதல்படி என்றாலும்
துள்ளளே !

Saturday, 10 December 2016

கண்முன்

காண்பது மட்டுமே காதல்
என்றால்
காதலியே மன்னித்துவிடு !
இதுவரை
காதலிக்க மறந்தேன் நான் !
ஏதோ
ஓர் மூளையில் தேடுகிறேன்
கனியே
எப்பொழுது சுவைப்பேன் உனை !
நீ . .
என்பதாலோ என்னவோ
என் தேடலும்
இனி உன்(மை)யை தொடரும் !
காத்திருப்பேன் உன் தேடலில்
காதல்க்கொண்டு . . .

Saturday, 5 July 2014

வருத்தம் !!!

காதல்
வருத்தப்பட்டது...!

என் நண்பன்
காதல் கதை பேசும்போது
நான்
தெருவோரம்
காத்திருப்பதைக் கண்டு.....!

Friday, 4 July 2014

புகைப்படம்

சிரித்துக்கொண்டே இருக்கிறேன் !...

ஏதோ ஒளியில் ,
ஒரு நொடி சிலையாய் .
கண்களை மறைத்த
கண்ணாடித் திரையை நோக்கி ,
புன்னகைக்க மறந்த,

என்
புகைப்படம் பார்த்து !....