Friday, 31 August 2018

தமிழ் !


ஒப்பிடவில்லை
ஒப்பில்லா மொழியை !

இறைப்பொருள்
அதன் உணர்வு.

அதிகமே !
என் மொழியின் விளக்கம்.

ஒலி உரு-ஆன உயிர்க்கு
உடல் விழி ஓதும் பிராத்தனை,
உளியால் உருவான கவிதை !


திருத்தும்
திருந்தும்
துதி தினந்தோறும் பிறக்காதோ !
இறவாத்தமிழ் - எனும்
இயல்பு ஒன்று
இந்த நொடியே தொடராதோ !

Saturday, 11 August 2018

உவமை !

முதல் வார்த்தையே
பித்தன் என்றால்
பிழையாகுமோ ?
பின்வரும் அர்த்தம்
பிரியாது என்றால்
புரிந்துகொள்.

பிதற்றுவது பித்தனல்ல !

பிஞ்சும்,
புரியும்,
புத்தி உருவாக்கியது
உடையவன்தான்.

உன்னுள் இருக்கும்
உள்ளம் தெரிவதைவிட,
உன் உவமையதைக்காட்டு !

உன்னோடு
என்னவனும் (எழுத்து அவன்)
வாழ்வான் !

Saturday, 14 April 2018

ஒரு நாள் !

ஓர் மரத்தடியில்
மௌனமாய் !
இயற்கையின் குரல்
கேட்கும் அளவிற்க்கு
அமர்ந்திருக்கிறேன் !

தன்னிலை !
என்ன என்பதை
சொல்ல தெரியாதபோதும்,
சொல்ல தோணுகிறது.
நான் !
எங்கோ ஓடி
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
 
எல்லாம் மறந்து போக
இன்பம் கிடையாதே
என்னுல் !
எழுதும் விதியும்
எழுத்து பிழையில்தான்.

Thursday, 12 April 2018

உன்புலம் !

தெரியாதவை,
என்னை திணறவைப்பவை !

தெரியாததில்,
நாளை என்கிறேன் !

தெரிந்தவையே,
நான் என்கிறேன் !

ஆச்சர்யம் - தெரியாமல் பார்ப்பதில்தானே !

தோன்றும் எண்ணங்களே
எங்கிருந்து தோன்றுகின்றீர் ?
உன்புலம் தெரியாமல் தேடுகிறேன் !
உண்மையில் உன்னுள் ஓடுகிறேன் !

தெரிந்தவையே !
உனக்கொன்று சொல்கிறேன்
தெரியாதவை !
என்னை தெளிவுப்படுத்தும் .

Wednesday, 11 April 2018

நாளும்

ஒரு
தோல்வியைக்கண்டு
திரும்பும் கனவு
கதையாக வேண்டும்
உடன்
தோழமைக்கொண்டு
துணையாக வந்தால்
தொலைத்திட வேண்டும்

நான் எனும் நல்லொழுக்கத்தை !

- நாளும் தொலைப்போம்
ஒரு
நல்லொழுக்கத்தை !

சார்ந்த எண்ணங்கள் !

எண்ணங்கள்,
யோசிப்பது அனைத்துமே எண்ணங்களா ?

இவ்வுலகில் பிறந்தேன்
- இன்று வரை வளர்கிறேன்.

சிலையாய் சிந்தித்தாலும்
சிலை சிந்திக்குமா என்பதில் தோற்கிறேன்.
சரி,
முன்னோடிகள் இருக்கிறார்களா
என் பாதையில் ?
பாதி கடந்தவர்கள் எல்லாம்
பைத்தியம் ஆனார்கள் என எச்சரிக்கை.

ம்,
தாங்கிக்கொண்டேன்
- இன்று வரை வளர்கிறேன்.

உண்மையில் உலகிற்கு புரிகிறதா ?

ஒருவர்
உன் கண்களில் தெரிவதைவிட,
அவர் கண்களுக்கு பின்னால்
ஆயிரம் பார்க்கிறார்கள் என்று.

எனக்கு எதுவும் தெரியவில்லை !

பிறவியிலேயே பார்வை போய்
தனிமை வந்து
மனிதனிடம் மாட்டிக்கொண்ட
நாய்போல்,
நான் ஊமையாக பிறந்துவிட்டேன்.
- என ஊளையிடுகிறேன்

தவிர்க்க முடியாதவைதான்
தகர்க்க முடியாதவை அல்ல !

நம் நினைவு தெரியும் முன்பே
நம்மை நினைவில் கொண்டதல்லவா
இந்த சமூகம் !
சராசரி ஒருவனாக
வளம் வருவேனா
எனக்குள்ளாகவே ஏக்கங்கள்.
நான் என்னை மறந்தாலும்
ஞாபகம்,
சிலரை மட்டும் நினைவூட்டுவது
அன்பில்தான் !

ஒரு கடிதமாய் உருவெடுக்கிறேன் !
சிலருக்கு செய்தி
சிலருக்கு உணர்வாக உலவுகிறேன்.
நீ கரைந்த எண்ணங்களில்
நான்
நானாக வாழ வழிகிடைக்குமா ?

Sunday, 8 April 2018

நீங்காதவையே !

மறக்க முடியாத
நினைவுகள் நீங்காதவையே !
திரும்ப திரும்ப
எடுத்து என்னை காயப்படுத்தாதே,
என்னில் இருக்கும் சிறு
ஆனந்தத்தையும்
நான் இழக்க நேரிடும் .